சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் `அயலான்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷாவின் கேமரா என படத்தின் அறிவிப்பு தொடங்கியபோதே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில் படம் குறித்து படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களின் சுருக்கமான தொகுப்பு இதோ!
-
ஏலியன் வெச்சு படம் பண்ணலாம்னு ஐடியா இருந்தது. ‘இன்று நேற்று நாளை’ வெளியான ரெண்டாவது நாளே பார்த்துட்டு, சிவகார்த்திகேயன் போன் பண்ணிப் பேசினார். ‘ரொம்ப நல்லாருக்கு. டெவலப் பண்ணுங்க’ன்னார். இப்படி ஆரம்பமானதுதான் ‘அயலான்.’
-
2018-ல ஷூட்டிங் போனோம். முதல் ஷுட்யூலிலேயே 50 சதவிகிதம் முடிஞ்சுடுச்சு. அப்புறம், நாங்க திட்டமிட்டபடி நடக்கல. அப்புறம் 2019-ல மறுபடியும் ஷூட்டிங் போனோம். நின்னுச்சு. இதை விட்டுட்டு வேறெதாவது படம் பண்ணலாம்’னு சொன்னாங்க. 2020-ல கொஞ்ச நாள் ஷூட்டிங் போனோம். லாக்டௌன் வந்திடுச்சு. ‘என்னடா’ இது… நமக்கு வந்த சோதனை’ன்னு இருந்தது. அப்புறம் 2021-ல ஷூட்டிங்கை முடிச்சோம். கடைசி 50 நாள் படப்பிடிப்பை முடிக்க மூணு வருஷமாகிடுச்சு.
-
ஒரு ஏலியன் நம்ம வாழ்க்கைக்குள் வந்தா எப்படி இருக்கும்ங்கிறதுதான் படம். இதை ஹாலிவுட்ல பண்ணி பண்ணி அவங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு. நம்ம ஊர்ல முதல்முறையா பண்ணுறோம்.ஒவ்வொரு ஷாட்டும் தனித்தனியா வடிவமைக்கணும்.
-
யோகிபாபு, கருணாகரன், கோதண்டம் இவங்க எல்லோரும் படத்துல சர்ப்ரைஸ் பேக்கேஜா இருப்பாங்க. எஸ்.கே-வுக்கு அம்மாவா பானுப்ரியா மேம் நடிச்சிருக்காங்க. தவிர, ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, இஷா கோபிகர் தமிழ்ல நடிக்கிறாங்க.
-
பிஜோயும் Phantom FX டீமும் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய தூண். இந்தப் படத்தை உருவாக்கணும்னு பிஜோய் நினைச்ச எண்ணம் விலைமதிப்பில்லாதது. சிக்கலில் இருந்தபோது, அவங்க வந்து இணைஞ்சதுக்கு காரணம், படத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான்.
-
நீரவ் ஷா சார், முத்துராஜ் சார், எடிட்டர் ரூபன், Phantom FX பிஜோய்னு டெக்னிக்கலா எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் கிடைச்சாங்க.
-
கதையைக் கேட்டதில் இருந்தே ‘ரஹ்மான் சார்கிட்ட கேட்கலாம்’னு சொன்னார் எஸ்.கே. அவரை சந்திச்சுக் கதை சொன்னேன். கேட்டவுடன் ‘ரொம்ப நல்லாருக்கு’. ஆனா, பெருசா இருக்கே’ன்னு சொன்னார். படம் பார்த்து ‘சூப்பர் சூப்பர்’னு பாராட்டினார்.
இயக்குநர் ரவிக்குமாரின் முழுமையான நேர்காணலைக் காண, ‘அயலான்’ எக்ஸ்க்ளூசிவ்: அன்பு காட்டும் சிவகார்த்திகேயன்; அலப்பறை செய்யும் ஏலியன்!
+ There are no comments
Add yours