திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரபல நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவும் அவரது கணவரும் பிரபல இயக்குனருமான செல்வமணியுடன் இன்று சாமி தரிசனம் செய்தார். 

ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வரவேண்டும் என்ற தனது வேண்டுதலை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளி வேல்-ஐ காணிக்கையாக வழங்கிவிட்டு சாமி தரிசனம் முடிந்தபின் செய்தியாளர்கள சந்தித்தார். 

அப்போது, மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மட்டுமே  ஜாமினில் வந்திருப்பதாகவும் மீண்டும் 21ஆம் தேதிக்குள் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்றார். 

மேலும் படிக்க | “என்னங்க இப்படி இருக்கு..” ‘லால் சலாம்’ டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!

பல்வேறு சாட்சிகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும் இதுவரை 18 முறை தடை ஆணை உத்தரவு வாங்கி வெளியே இருந்ததாகவும் தற்போது தண்டனை கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பலமான மக்கள் நேசிக்கிற தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால்  தவறு செய்தவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டமாக தான் இருக்கும் என்றார். மேலும் சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும்  மக்களுக்கு நல்லது செய்து நான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பதாகவும்   என்னை எதிர்க்க முடியாமல் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னுடைய கேரக்டரை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தனி நபர் விமர்சனத்தை  எந்த ஒரு ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள், செருப்பால்தான் அடிப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். 

தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி மக்கள் அவர்களை ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். நாளை ஆட்சிக்கு வந்தாலும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் அவர்கள் சொல்வதில்லை. எந்நேரமும் ஜெகன்மோகன் ரெட்டியை திட்டுவதையே சந்திரபாபு நாயுடு வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப நல்ல திட்டங்களை அறிவித்து  செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் அதனால்தான் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.  ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் தொந்தரவு செய்வதாகவும் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க | அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: