தீபாவளிக்கும் சென்னை திரும்பாத அஜித்தின் விடாமுயற்சி படக்குழு!
10 நவ, 2023 – 12:38 IST

எச்.வினோத் இயக்கிய துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித்குமார். அவருடன் திரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இப்போது வரை விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பவில்லை. இதுகுறித்து அப்பட வட்டாரங்களில் கூறுகையில், தீபாவளிக்கு விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்ப போவதில்லை. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அங்கேயே தீபாவளியை கொண்டாடி விடலாம் என்று அஜித் குமார் கூறிவிட்டதாகவும், அஜர்பைஜானில் படமாக்க வேண்டிய காட்சிகள் முடிந்த பிறகு தான் படக்குழு சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
+ There are no comments
Add yours