விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
விஜய் படம் என்றாலே சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. அவ்வகையில் இப்படத்திற்கும் பல பிரச்னைகளும், சிக்கல்களும் இருந்தது. இதற்கிடையில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற அதேசமயம் சில கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகப் படக்குழுவும் அறிவித்திருந்தது.
இவற்றையெல்லாம் தாண்டி விஜய்யின் இந்தப் படத்தில் ரசிகர்கள் ரொம்பவும் மிஸ் செய்த ஒரே விசயம் ஆடியோ லாஞ்ச்சும், விஜய்யின் குட்டி ஸ்டோரியையும்தான். ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பு இந்த வெற்றி விழா மூலம் நிறைவேறியுள்ளது.
இவ்விழாவில் வழக்கம்போல தன் பேவரைட்டான குட்டி ஸ்டோரியை சொல்லத் தொடங்கினார். ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க… அந்த காட்டுல காக்க கழுகு… முயல், மான்… காட்டுல இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னோரு நபர் ஈட்டி. வேல் வச்சுருக்கிறவர் முயல் குறி வைக்கிறார். இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார்.
இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறுகள். வீட்டுல குட்டி பையன் அப்பாவோட உடையை போட்டுக்குவான். அப்பா சட்டை பெருசு. அப்பா மாதிரி ஆகணும்னு கனவு காண்கிறான்.
பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு… விரல் இடுக்குலன்னு ஒரு வரி.. அதை ஏன் சிகரெட்டுன்னு நினைக்கிறீங்க… அது தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்… அண்டால குடுக்கிறது கூழாகக் கூட இருக்கலாம். இது மாதிரி மழுப்பல் பதில் நான் சொல்லலாம்.
ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க. ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்குத் தேவையான விஷயங்களைத்தான் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டீங்கனு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவுங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா… அவங்கல்லாம் ரொம்ப தெளிவு… என் படம் நல்லா இல்லைன்னா நல்ல இல்லைன்னு சொல்லிட்டு போயிடறாங்க… உங்கள்ல பலர் சொல்லாமையே பல விஷயங்கள் செய்றீங்க…
‘Avm’ சரவணன் வடபழனில போகுறப்போ ஒருத்தவங்களுக்கு உதவி பண்ணயிருக்காங்க… அப்போ அவுங்க நன்றி ‘எம்ஜிஆர்’ ன்னு சொன்னாங்களாம்…. யார் உதவு பண்ணாலும் அது ‘எம்ஜிஆர்’ பண்ணினதுன்னு நினைச்சுடறாங்க. எனக்கு ஒரு ஆசை வருங்காலத்துல இது மாதிரி உதவி பண்றது நம்ம பசங்க தான்னு சொல்லணும்” என்றார்.
+ There are no comments
Add yours