‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ல் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்’ என கமல் அறிவித்ததிலிருந்தே யார் அந்த ஐந்து பேர் என்பதுதான் பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சீரியல் நடிகை அர்ச்சனா, பாடகர் கானா பாலா, திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் என மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர்களில் சீரியல் நடிகை அர்ச்சனா முதல் நாளே செல்வது போலத்தான் முதலில் திட்டமிட்டு புரொஃபைல் ஷூட்டிங்கெல்லாம் முடிவைடைந்ததாம். ஆனால் என்ன காரணமோ இவர் முதல் நாள் செல்லவில்லை.
தற்போது வரும் வெள்ளிக் கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லலாமென எதிர்பார்க்கப் படுகிறது.
சரி, இந்த மூன்று பேர் தவிர மீதமுள்ள இருவர் யார்?
இருவரில் ஒருவர் ஒரு சீரியல் நடிகர் எனத் தெரிகிறது. ஏற்கனவே முந்தைய சீசன்களிலேயே இவரது பெயர் அடிபட்டதாகவும் தற்போதுதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நடிகர் பப்லுதான் அந்த சீரியல் பிரபலமெனச் சொல்கிறார்கள் சிலர். வேறு சிலரோ பப்லு இல்லை வேறொரு சீரியல் நடிகர் என்கிறார்கள். எப்படியும் விஜய் டிவி தொடர்புடைய நடிகராகத்தான் இருப்பார் என்பது மட்டும் தெரிகிறது.
அந்த ஐந்தாவது போட்டியாளர் சோஷியல் மீடியா மற்றும் சின்னத்திரைக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான். மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி வரும் பேச்சாளர் அன்ன பாரதிதான் அவர் என்கிறார்கள். அன்னபாரதியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. மேடைப் பேச்சு, பட்டிமன்றம் என அசத்தி வருகிறார். இவரது பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்குமென்கிறார்கள் இவரது பேச்சைக் கேட்டவர்கள். சமீபத்தில் தென்மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இவர் வர்ணனை செய்தது நினைவிருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டுக்குள் அன்னபாரதி கன்டென்ட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours