தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் பிக்பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக என்ட்ரியானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் ஜனனியும் நடித்திருக்கிறார்.
இது குறித்து ஜனனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், `தளபதி விஜய்யுடன் நடித்தது கனவாக இருக்கிறது.. ஆனால், நிஜம்! இது என் முதல் திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும், இத்தகைய பேரனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் நன்றி! தளபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எனக்குக் கிடைத்தவுடன் அதனை பதிவிடுகிறேன். அழகான மனுஷி த்ரிஷா!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours