LEO FDFS: ‘லியோ’ 4 மணி காட்சி….; நீதிமன்றம் சொன்னது இதுதான்! | LEO FDFS court’s order about vijay’s leo movie 4 am special show screening

Estimated read time 1 min read

இதற்கிடையில் ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ’ காலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரிக்கபட இருந்த நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நடந்த இந்த வழக்கு விசாரணையில், ” `லியோ’ படத்திற்கு 4 மணிக் காட்சிக்களுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. காலை 9 மணி காட்சிக்குப் பதிலாக 7 மணி காட்சி திரையிடுவது தொடர்பான அனுமதி குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதை நீங்கள் அரசிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்.

கடந்த முறை 4 மணி காட்சிக்கு சென்றபோது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். ‘லியோ’ ட்ரெய்லர் வெளியான போது திரையரங்கம் ஒன்று சேதமானது. எனவே பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. அனைத்து படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்குகிறோம். அதன்படி ‘லியோ’விற்கும் வழங்கியுள்ளோம்.

ஒருநாளைக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘லியோ’ படம் 2.45 மணி நேரம் என்று தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருக்க மாட்டோம். நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருப்போம். தற்போது ‘லியோ’ படத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பது விடுமுறையான சனி, ஞாயிறு, திங்கள் நாட்களில் மட்டும்தான். சாதாரண நாட்களில் இந்த விலக்கு அளிக்க முடியாது” என்று கூறியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours