நான் என் வாழ்நாளில் என் துணையை இழந்துள்ளேன். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இல்லாமல் என் நாள்களை கடப்பது ரொம்பவும் கடினமானதாகவே உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளோம். சுஷாந்த்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சுஷாந்த் மரணத்தின்போது உண்டான வலி, சோகம், தொற்றுநோய் மற்றும் என் மீதான குற்றச்சாட்டு, சிறை ஆகியவை சொல்ல முடியாத அளவு கடினமாகவே இருந்தன. என்னால் நிம்மதியாக வெளியில் கூட செல்ல முடியவில்லை. நடைப்பயிற்சி சென்றாலும், முடி வெட்ட சென்றாலும் அல்லது பெற்றோருடன் வெளியில் சென்றாலும் என்னை நோக்கிய எதிர்மறை விமர்சனங்களை நான் எதிர்க்கொண்டேன். துக்கப்படுவதற்குக்கூட எனக்கு நேரம் வழங்கவில்லை.
நீண்ட நாள்களுக்குப் பிறகுப் இப்போதுதான் வெளியில் வர தொடங்கியுள்ளேன். சிறிய சிறிய வெற்றிகளும் எனக்குப் பெரிய உற்சாகத்தை தருகின்றன. இப்போது சாதாரண வாழ்க்கையை வாழ முடிந்ததற்குப் பலருக்கும் நன்றியுள்ளவராக இருக்க விரும்புகிறேன். வாழ்வில் முன்னேறிச் செல்வது நம்மை மனிதனாக்கும் ஒரு விஷயம். அது நம்மை வாழ வைக்கிறது” என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours