Last Updated : 02 Oct, 2023 05:45 AM
Published : 02 Oct 2023 05:45 AM
Last Updated : 02 Oct 2023 05:45 AM
சென்னை: இயக்குநர் ராஜு முருகன், கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் கார்த்தியின் 25-வது படமான இதில், அனு இமானுவேல் நாயகி. சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து ராஜுமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் இணைந்து படங்கள் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனத்துக்காக கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தை ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்
தவறவிடாதீர்!
+ There are no comments
Add yours