தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத்

02 அக், 2023 – 10:57 IST

எழுத்தின் அளவு:


Kangana-Ranauts-first-hit-in-Tamil

ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அங்குள்ள முன்னணி நடிகர்களைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும் தைரியமாக விமர்சிக்கும் ஒரே நடிகை. எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அங்கு வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழில் விரும்பி நடிக்கும் கங்கனாவுக்கு இங்கு மட்டும் வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமாகவே இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பே 2008ல் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் தொடர்ந்து தமிழிலும் நடித்திருப்பார் கங்கனா.

அதற்குப் பிறகு ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021ல் வெளிவந்த மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படமும் வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது.

இருப்பினும் மூன்றாவது முயற்சியாக ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்தார். இந்த முறை அவர் ஏமாறவில்லை, படம் வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் பதிவுகளுக்கு கங்கனாவின் குழுவினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: