தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக டிஆர்பியை தேடி தரும் ஷோக்களுள் ஒன்று, பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் ப்ரதர் என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியை இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தமிழிலும் அதே பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் அந்த குரல்..
பிக்பாஸ் நிகழ்ச்சியை தூண் போல தாங்கி பிடிப்பவர்கள், இரண்டு பேர். ஒருவர், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன். இன்னொருவர், பிக்பாஸ் ஆக குரல் கொடுக்கும் மர்ம நபர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஒவ்வாெரு போட்டியாளரையும் “வணக்கம்..வாங்க..” என்று இவர் அழைக்கும் தொனியே அவர்களின் வயிற்றில் புளியை கரைக்க செய்து விடும். நிகழ்ச்சி நெடுகிலும் இவரது குரல் கேட்கவில்லை என்றாலும், அவ்வப்போது ஹவுஸ் மேட்ஸை அலர வைக்கும் வகையில் திடீரென்று ஒளிக்கும். அந்த அளவிற்கு இவரது குரலுக்கு பவர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குரலில் ஆச்சரியம், பயம், பதட்டம், மகிழ்ச்சி என எதுவுமே தெரியாது. எப்போதும் ஒரே மாதிரியான உணர்ச்சியற்ற தொனியில் மட்டுமே இந்த குரல் இருக்கும். இதனாலேயே மக்களுக்கு “இந்த குரலின் சொந்தக்காரர் யார்?” என தெரிந்து கொள்ள பயங்கர ஆர்வம் மிகுதியாக இருந்தது.
மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!
இவர்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களின் போது, அந்த குரலுக்கு சொந்தக்காரர் என்பது யாருக்கும் வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், மூன்றாவது சீசனில் இவர் யார் என்பதை ரசிகர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டனர். அவர் பெயர், சாஷோ சதீஷ் சாரதி. இவர், பி.ஏ பாஸ் 2, மஞ்சுநாத், கஹானி பாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தி படங்களில்தான் இவர் இதுவரை நடித்துள்ளார். இவருக்கு தமிழ் பெரிதாக தெரியாது என கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பலருக்கு அட்வைஸ் செய்வது, ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுப்பது என்றிருக்கிறார். இவர்தான் பிக்பாஸ் என்று சில வருடங்களாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இவர் இந்த தகவலை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் அந்த இல்லத்திலேயேதான் இருப்பார் என்றும் தமிழ் மட்டுமன்றி கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பேசி அசத்துவார் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் உள்ளிட்ட பலர், இவரை ‘பிக்பாஸ்’ என்றுதான் அழைப்பார்களாம்.
பிக்பாஸ் சீசன் 7:
2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. இந்த சீசனில் மக்களுக்கு பரீட்சியமான பலரும், திரைப்படம் மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் சிலரும் பங்கேற்பாளராக இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 18 பேர், இந்த சீசனின் தற்போதைய போட்டியாளர்களாக உள்ளனர். நேற்று, இந்த ஷோவின் ஆரம்ப நிகழ்ச்சி நடந்தது. இதில், அனைவருக்கும் நினைவு பரிசு ஒன்று வழங்கப்பட்டது. முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார். கடைசி போட்டியாளராக நடன கலைஞர் விஜய் அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் சில நாட்கள் சென்றவுடன் புதிதாக சில போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளே செம டாஸ்க்..!
பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த முதல் நாளே, ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதலில், ஆரம்ப போட்டியாளராக வந்த கூல் சுரேஷிடம் கேப்டன்ஸி பேட்ஜ் கொடுக்கப்பட்டது. இதை அவர் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அடுத்து வரும் போட்டியாளரிடம் அவர் 5 நிமிடத்திற்குள் விவாதித்து அவருக்கே அந்த பேட்ஜை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும். இவர், அடுத்து வந்த பாேட்டியாளரான பூர்ணிமா ரவியிடம் பேட்ஜை பரிகொடுத்தார். அப்படி பேட்ஜ் கடைசி வரை கை மாறியது. பேட்ஜை தக்கவைத்து கொள்ள ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வாெருவரும் விவாதம் செய்தனர். இதனால் முதல் நாளே ஒவ்வொருக்குள்ளும் சிறிதாக தீப்பொறி கிளம்பியது. இனி வரும் நாட்களில் இது இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்…கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours