Bigg Boss 7 Tamil: `குக்கு வித் கோமாளி டு பிக் பாஸ்!’ – கம் பேக் கொடுத்த விசித்ராவின் பயணம்| Bigg Boss Season 7 contestant vichitra’s travel to Bigg boss

Estimated read time 1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வில் குணச்சித்திர நடிகைகள் அல்லது கவர்ச்சி நடிகைகள் இருப்பது வழக்கம். நமீதா, மும்தாஜ் போன்ற வரிசையில் இந்த சீசனில் இந்த இடத்தை பூர்த்தி செய்யவிருக்கிறார் நடிகை விசித்ரா. 

90ஸ் கிட்ஸின் மத்தியில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இவர், தமிழில் “பொற்கொடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ‘சின்னத்தாயி’, ‘தலைவாசல்’, ‘தேவர் மகன்’, ‘எங்க முதலாளி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரம், கவர்ச்சி, காமெடி, டான்ஸ் நம்பர் போன்ற பல வேடங்களில் நடித்துள்ளார். ‘தலைவாசல்’ படத்தில் ‘அம்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் பிரபலமானவர். 

கிளாமர் அல்லாமல் கவுண்டமணியோடு சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்கள் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்! ‘பொண்ணு வீட்டுக்காரன்’ திரைப்படத்தில் இவர் நடித்த ‘டயானா’ என்ற ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரம், ‘வில்லாதி வில்லன்’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடம் என 90ஸ் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours