இவங்கெல்லாம் யார் தெரியுமா.. எல்லாமே என் மனைவிகள்.. புது மனைவிக்கு ஷாக் கொடுத்த இளைஞர்.,

Estimated read time 1 min read

பெரம்பலூர்:

பெரம்பலூரில் சிறுமி உள்பட பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் புதிதாக மீண்டும் திருமணம் செய்த நிலையில் அந்த பெண்ணிடம் புகைப்படங்களை காட்டி இவர்கள் எல்லாம் எனது மனைவிகள் என கூறியதை அடுத்து அந்த பெண் அந்த நபர் மீது புகார் கொடுத்துள்ள
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பூவழகி (22). இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

பென்னகோணம் கிராமம்

பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராசு (25). இவருக்கும், பூவழகிக்கும் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 5 சவரன் தங்க நகைகள், வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் சிறிது காலம் கழித்து பத்து சவரன் தங்க நகையும், இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறியிருந்தனர்.

திருமணம் முடிந்து 2 மாதங்கள்

திருமணம் முடிந்து 2 மாதங்கள் பென்னகோணம் கிராமத்தில் உள்ள பால்ராசு வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பால்ராசு தனது செல்போனில் ஏராளமான பெண்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பூவழகியிடம் காண்பித்துள்ளார். அவர்கள் குறித்து பூவழகி கேட்டதற்கு, தான் இதற்கு முன் பல பெண்களை நகை பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்திருப்பதாகவும், உன்னை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

பால்ராஜ்

இதனல் மனமுடைந்த பூவழகி வேறு வழியில்லாமல் பால்ராசுவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒருநாள் பெற்றோரிடம் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 1 லட்சம் ரூபாய் பணமும், 10 சவரன் தங்க நகையும், வாங்கி வரவேண்டும் என்று கூறி பூவழகியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பால்ராஜ் அழைத்து செல்லவில்லை

ஆனால் பூவழகியின் பெற்றோர் தங்களால் இவ்வளவு தொகையை உடனே கொடுக்க முடியாது என்றும், தற்போதைக்கு 50 ஆயிரம் மட்டும் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் பால்ராசு அவரை மீண்டும் வந்து அழைத்துச் செல்லவில்லை, பலமுறை செல்போனில் அழைத்தும் அவர் வரதட்சணை பணம் இல்லாமல் பூவழகியுடன் வாழ முடியாது எனக் கூறியுள்ளார்.

காரைக்குடி

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசார் பால்ராசுவைத் தேடி பூவழகியின் வீட்டிற்கு வந்துள்ளனர். காரணம் கேட்டபோது, சிவகங்கை மாவட்டம் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் அது குறித்து புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது காரைக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம்

மேலும், தன்னை திருமணம் செய்வதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணை திருமணம் செய்ததில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதும் பூவழகிக்கு தெரியவந்தது. நகை பணத்திற்கு ஆசைப்பட்டு, பால்ராசு பல பெண்களை திருமணம் செய்ததும், சில மாதங்கள் மட்டுமே அவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்ததும் பூவழகிக்கு தெரியவந்தது.

வழக்குப் பதிவு

அதன் பிறகுதான் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பால்ராசு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பூவழகி புகார் அளித்துள்ளார். பால்ராசு பல பெண்களுடன் எடுத்துக்கொண்டு போட்டோக்களையும் ஆதாரமாகக் கொடுத்துள்ளார். பூவழகி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், பால்ராசு மீது, இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours