நடிகர் மோசன் சர்மா மீது வழிமறித்து தாக்குதல்
30 செப், 2023 – 12:13 IST
சச்சின், சுயம்வரம், அப்பு, பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மோகன் சர்மா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 70 வயதான மோகன் சர்மா தி.நகரில் இருந்து சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக மோகன் சர்மா சேத்துபட்டு போலீசில் புகார் செய்துள்ளார். காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன் சர்மா தனக்கு சொந்தமான வீடு ஒன்றை விற்பதற்காக சில தரகர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். இதில் ஒருவர் மூலம் வீட்டை விற்றிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த மற்ற தரகர்கள் கூலிப்படையை ஏவி மோகன் சர்மாவை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மோகன் சர்மா தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவாகி உள்ளது. இதை வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours