`வானத்தைப் போல’ தொடர் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கார்த்தி. கார்த்தியும், காயத்ரியும் சமூகவலைதள பக்கங்களில் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். இருவரும் சேர்ந்து ரீல்ஸ்கள் பல பதிவிட்டு வந்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு `வானத்தைப் போல’ தொடர் நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் குறித்து கார்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ` இருவர் ஒன்றான தருணம்!’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அதே போல. நேற்று `சுந்தரி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் `அரவிஷ்’ஷிற்கும், `திருமகள்’ தொடரில் கதாநாயகியாக நடித்த ஹரிகாவிற்கும் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. அடுத்ததாக திருமண பந்தத்தில் இணைய இருக்கும் இந்த ஜோடிக்கும் பலர் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இரண்டு ஜோடிகளுக்கும் இனிய வாழ்த்துகள்!