“சாகத்தான் போறோம் அதைச் சொல்லி அவுங்கள பயமுறுத்த வேண்டாம்’னு நினைச்சேன்”- ‘என் உயிர்த் தோழன்’ பாபு |Article about en uyir thozhan babu

Estimated read time 1 min read

பாபுவைப் பரிசோதித்த டாக்டர் ராமமூர்த்தி.  ‘பையா, முதுகெலும்பில் இன்னொரு ஆபரேஷன் செய்யணும்டா உனக்கு’ என்று சொல்லிவிட்டு , அதைச் செய்தார் . அதற்குப் பிறகு பாபுவின் உடல் நிலையில் கண்ட முன்னேற்றத்தில் அயர்ந்து  ‘This is not Medical, This is Miraclel’ என்று சொன்னாராம் ராமமூர்த்தி. போன தீபாவளி அன்னிக்கு டைரக்டர் ( பாரதிராஜா) சாருக்கு போன் பண்ணினேன் அவரே எடுத்தார் .

‘தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்!’

‘நல்வாழ்த்துக்கள்!’

‘பாபு பேசறேன் சார்!’

‘எந்த பாபு?’

‘சார்! என்ன சார்… உங்க பாபு சார்!’னு சொல்லிட்டு போனை வெச்சிட்டேன் .

நேர்ல அவரைப் பார்க்கணும்னு அப்பவே தோணிச்சு . கிளம்பினேன் . நான் போனப்ப , டைரக்டர் ஏதோ யோசனையில் இருந்தாரு . திரும்பிப் பார்த்துட்டு  ‘ஏய் ! யாரப்பா அது?’ன்னாரு தூரத்துலேர்ந்து . நான் அங்கேயே நின்னு சிரிச்சேன் . நின்னு நிதானிச்ச பிறகுதான் என்னை அடையாளம் தெரிஞ்சது . ‘பொல பொல’ன்னு அவர் கண்ணுல தண்ணி வழிஞ்சது. ஓடிவந்து கட்டிப்பிடிச்சுட்டு, ‘பாபு! நம்ப முடியலடா. உன் கஷ்டமெல்லாம் இன்னியோட ஓடிப்போச்சுடா! இனிமே டெய்லி ஆபீஸ் வாடா’ன்னாரு . நாகர்கோவிலுக்கு அவுட்டோர் ஷூட்டிங்குக்குக் கூட்டிக்கிட்டுப் போய்க் கொஞ்ச கொஞ்சமா தெம்பு கொடுத்தாரு.

பாரதிராஜா

பாரதிராஜா

அவரோட ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு வேணும். இன்னிக்கு நான் பழைய பாபுவா ஓரளவு நடமாடறதுக்குக் காரணமா என் அம்மா, அப்பா, தம்பி , பன்னீர், பிஸியோதெரபிஸ்ட் நாராயணன், டாக்டர்கள் ஸ்ரீதர் ,ராமமூர்த்தினு ஒரு பட்டியலே இருக்கு சார் ! நான் – முதல்ல சொன்னேனில்ல  என் ஸ்கூல் காலத்து ஃப்ரெண்டு ராதாமோகன்.  இப்ப அவன் டைரக்ட் பண்றான் , ஒரு படத்தை. அதுக்கு, அவனும் நானும் சேர்ந்து ஸ்கிரீன் ப்ளே பண்றோம் . டயலாக் நான் எழுதறேன் – படத்துக்குப் பேரு ” ஸ்மைல் ப்ளீஸ் ! “

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours