தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா’ சீரியல்.

அண்ணா : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் மணமேடை ஏறி தனது விருப்பப்படி தான் கல்யாணம் நடப்பதாக சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்க மறுபக்கம் சண்முகம் வேகவேகமாக ஓடி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது பாக்கியம் வேண்டாம் நான் என்று சொல்லிக் கொண்டிருக்க முத்து பாண்டி கல்யாணம் நடக்குது அது உனக்கு புடிக்கலையா என்று கேட்க விருப்பம் இல்லாமல் கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறாள். 

மாப்பிள்ளையை அழைத்து வர சொல்லும் சௌந்தரபாண்டி

அடுத்ததாக பரணியை மணமேடைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து சௌந்தரபாண்டி மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல கார்த்திக்கை கூட்டி வரச் சென்ற சிவபாலன் ஓடி வந்து மாப்பிள்ளை வீட்டாரையும் காணவில்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

சௌந்தரபாண்டியின் மீது சந்தேகப்படும் பரணி, பாக்கியம்

பரணி மற்றும் பாக்கியம் இருவரும் நீங்கதான் என்னமோ பண்ணி இருக்கீங்க என சௌந்தரபாண்டியின் மீது சந்தேகப்பட அவர் பரணி உனக்கு மட்டும் பொண்ணு கிடையாது எனக்கும் பொண்ணு தான் என்று பதில் கொடுக்கிறார். 

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

அது மட்டுமில்லாமல் மனதுக்குள் எல்லாமே அந்த திட்டப்படி கரெக்டா நடக்குது என்று சந்தோஷப்படுகிறார். மேலும் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் இது தன்னுடைய மானப்பிரச்சனை என சௌந்தரபாண்டி சொல்ல பரணி தீர விசாரிச்சிட்டு இன்னொரு நாள் கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று மணமேடையில் இருந்து எழுந்து கொள்ள அங்கிருந்த பெண்கள் அப்படி எழுந்திருக்கக் கூடாது என பரணியை உட்கார வைக்கின்றனர். 

நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காரும் சௌந்தரபாண்டி

உடனே சௌந்தரபாண்டி ஐயோ நெஞ்சு வலிக்குது என நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தற்கொலை குறித்து முன்பே கூறியுள்ள விஜய் ஆண்டனி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *