நிறைய யூடியூப் சேனல்கள் என்ன நடக்குதுன்னே தெரியாம தேவையில்லாத தகவல்களை அதிகமா பரப்பிட்டு இருக்காங்க. தெரியாம நீங்க போடுற விஷயங்களால் ஃபேமிலியில் உள்ளவங்க ரொம்பவே காயப்படுறாங்க. அது மட்டும் பண்ணாதீங்க! எல்லா யூடியூப் சேனல்களிடமும் இதை நான் கேட்டுக்கிறேன்!
மாரடைப்புனால இறந்துட்டார். அதைத் தாண்டி நாங்க வந்துட்டு இருக்கோம். அவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்ல ஒர்க்அவுட் பண்ணிட்டு இருக்கும்போது இறந்துட்டாரு, அது காரணம், இது காரணம் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மேல அவருக்கு ஆர்வம் அவ்வளவுதான்! இதுக்கிடையில் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம். அது ஒண்ணு மட்டும் உங்ககிட்ட வேண்டுகோள் வைக்கிறேன். எல்லாரும் வயசானவங்க. ஃபேமிலியை நாங்க தான் ஸ்ட்ராங் பண்ணிட்டு இருக்கோம். அதனால தயவுசெய்து சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கோங்க. சப்போர்ட் பண்ணினவங்களுக்கு ரொம்ப நன்றி!’ என உருக்கமாக பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours