இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’.
இப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் துல்கர் சல்மான் – சோனம் கபூர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தி ஸோயா ஃபேக்டர்’ படத்தின் போது நடந்த சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருந்தார் ராணா டகுபதி.

“துல்கர் சல்மான் ஒரு இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு எனது வீட்டிற்கு அருகே நடந்தது. அதனால் நான் துல்கரை பார்க்கச் சென்றேன். அப்போது அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பெரிய ஹீரோயின் ஒருவர், தனது கணவருடன் போனில் லண்டனின் ஷாப்பிங் செல்வது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் தன் டைலாக்கையும் மறந்து பல டேக்குகள் எடுத்துக் கொண்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த துல்கர் சல்மான் மிகவும் அமைதியாக அவர் எடுக்கும் டேக்குகளுக்கும் நடித்துக் கொடுத்தார்” என்று ராணா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் ராணா நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பலரும் சோனம் கபூரைத்தான் ராணா சொல்கிறார் என்று தகவல்களைப் பரப்பி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ராணா டகுபதி மன்னிப்பு கோரி ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார். அதில், “எனது கருத்துகளால் சோனம் கபூர் மீது ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணம், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நண்பர்களாக நாம் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளைப் பரிமாறிக்கொள்கிறோம்.
I am genuinely troubled by the negativity that has been aimed at Sonam due to my comments, that are totally untrue and were meant entirely in a light-hearted manner. As friends, we often exchange playful banter, and I deeply regret that my words have been misinterpreted.
I take…— Rana Daggubati (@RanaDaggubati) August 15, 2023
அதுபோல நான் அதனைச் சாதாரணமாகத்தான் சொன்னேன். ஆனால் எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டன. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் மிகவும் மதிக்கும் சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் எனது உளப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளக்கம் அனைத்து யூகங்களுக்கும் தவறான புரிதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்” என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours