மார்க் ஆண்டனி (தமிழ்)
‘AAA’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ரெட்ரோ கேங்ஸ்டர் திரைப்படமான இது செப்டம்பர் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு
எஸ்.ஹரி உத்ரா இயக்கத்தில் சரத், அய்ரா, ஜெயின், கஞ்சா கருப்பு, சோனா ஹைடன், மதன், மகேந்திரன், இளையா, கஜராஜ், ராசி அழகப்பன், தஸ்மிகா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு’. கால்பந்தட்டத்தை மையப்படுத்திய திரைப்படமான இது இது செப்டம்பர் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வாழ்க்கையையும், குடும்ப நிலையையும் உயர்த்துவதற்காகக் கால்பந்தாட்டத்தில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் போராட்டமும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் இதன் கதைக்களம்.
Kasargold (மலையாளம்)
மிருதுல் நாயர் இயக்கத்தில் ஆசிப் அலி, சன்னி வெய்ன், விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘Kasargold’. தங்கக் கொள்ளையை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
A Haunting in Venice (ஆங்கிலம்)
கென்னத் பிரானாக் இயக்கி நடித்திருக்கும் ஆங்கிலத் திரைப்படம் ‘A Haunting in Venice’. அகத்தா கிறிஸ்டியின் நாவலை மையப்படுத்திய இந்த ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற டிடெக்டிவ் அதிகாரியான கென்னத் பிரானாக், நண்பர் ஒருவரின் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நண்பர்களுடன் சென்று ஒரு பாழடைந்த மாளிகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் பல அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் பேயா அல்லது மர்ம கும்பலா எனக் குழப்பத்தில் மாட்டிக் கொள்ளும் அவர், அங்கிருந்து தப்பித்தாரா, கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Carl’s Date (English) – Disney+ Hotstar
பாப் பீட்டர்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் குறும்படம் ‘Carl’s Date’. காமெடி கலந்த அனிமேஷன் படமான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே வெளியான ‘Dug Days’ என்ற அனிமேஷன் குறும்படத் தொடர் மற்றும் ‘Up’ என்ற அனிமேஷன் படத்தின் தொடர்ச்சி ஆகும்.
புதிதாகக் கிடைத்த பெண் தோழியிடம் டேட் செய்வதற்காக வயதான எட்வர்ட் அஸ்னர், தனது செல்ல நாயிடம் டிப்ஸ் கேட்கிறார். அதுவும் அவருக்கு சில பயிற்சிகளை வழங்குகிறது. அதைச் சரியாகக் கற்றுக் கொண்டாரா, தன் பெண் தோழியைச் சந்தித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.
Once Upon a Crime (ஜப்பானிஸ்) – Netflix
மாயாஜாலங்கள் நிறைந்த உலகில் சின்ரலா, நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறாள். அவள் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் திடீரென மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார், சின்ரலா இந்தச் சதியிலிருந்து தப்பித்தாரா, இதன் உண்மை என்ன என்பதே இதன் கதைக்களம். ஜாலியான பேன்டசி திரைப்படமான இது, செப்டம்பர் 14ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
A Million Miles Away (ஆங்கிலம்) – Amazon Prime Video
அலெஜான்ட்ரா மார்க்வெஸ் அபெல்லா இயக்கத்தில் மைக்கேல் பெனா, ரோசா சலாசர், ஜூலியோ சீசர் செடிலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Million Miles Away’. நாசா விஞ்ஞானியாக இருந்த ஜோஸ் ஹெர்னாண்டஸ் என்பவரின் பயோபிக் இது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோஸ், விண்வெளி ஆராய்ச்சியாளராகும் தனது கனவை எப்படிச் சாதித்தார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) வெளியாகியுள்ளது.
Love at First Sight (ஆங்கிலம்) – Netflix
வனேசா காஸ்வில் இயக்கத்தில் ஹேலி லு ரிச்சர்ட்சன், பென் ஹார்டி நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Love at First Sight’. காதல் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 15ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் அறிமுகமாகி விமானப் பயணத்தில் காதலர்களாக மாறும் காதல் ஜோடிகள், தங்கள் போன் நம்பரை பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக போன் நம்பர் மிஸ் ஆகிவிடுகிறது. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத, தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. காதலால் சந்திக்கப் போராடும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா என்று இருவரின் காதல் தவிப்பை மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம்.
El Conde (ஸ்பேனிஷ்) – Netflix
பாப்லோ லாரன் இயக்கத்தில் ஆல்ஃபிரடோ காஸ்ட்ரோ, கேடலினா குரேரா, பவுலா லுச்சிங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘El Conde’. ஹாரர் காமெடி திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 15ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
250 ஆண்டுகளாக வாழும் ஒரு வயதான வேம்பயர், வாழ்ந்து சலிப்பாகி இறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அவருக்கு ஏன் அந்த சலிப்பு வந்தது, அவரின் இத்தனை கால வாழ்க்கையில் இந்த உலகைப் பற்றி அவர் தெரிந்து கொண்ட அனுபவம் என்ன என்பதை ஹாரர் காமெடி பாணியில் சொல்வதுதான் இதன் கதைக்களம். பிளாக் அன்ட் ஒயிட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
MY 3 (தமிழ்) – Disney+ Hotstar
‘SMS’ எம். ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, முகேன், ஜனனி ஐயர், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘MY 3’. ஜாலியான முக்கோணக் காதல் வெப்சீரிஸான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) முதல் வெளியாகிறது.
ரோபோட் சயின்டிஸ்டாக இருக்கும் சாந்தனு பாக்யராஜ், தன் காதலியான ஹன்சிகா மோத்வானிபோலவே ஒரு ரோபோவை செய்கிறார். மனிதர்களைத் தொட்டாலே தோல் அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் முகேன், அந்த ரோபோவை வாங்கி தன்னுடன் வைத்துக் கொள்ள எடுத்துச் செல்கிறார். ஆனால், ரோபோ பழுதானதால் சாந்தனு பாக்யராஜ், ரோபோவுக்குப் பதிலாகத் தன் காதலியான ஹன்சிகாவையே அனுப்பி வைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம்.
Bambai Meri Jaan (இந்தி) – Amazon Prime Video
ஷுஜாத் சௌதாகர் இயக்கத்தில் கே கே மேனன், அவினாஷ் திவாரி, கிருத்திகா கம்ரா, நிவேதிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Bambai Meri Jaan’. ஆக்ஷன், க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) முதல் வெளியாகிறது.
சுதந்திரத்திற்குப்பின் 1960களில் பம்பாயில் நடக்கும் க்ரைம்களிலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் தற்காத்து வாழ நினைக்கும் கதாநாயகனின் போராட்டம்தான் இதன் கதைக்களம்.
Kaala (இந்தி) – Disney+ Hotstar
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் திரிஷான், ஜிதின் குலாட்டி, சதீஷ் பாதல் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Kaala’. காவல் அதிகாரியான கதாநாயகன் பெரும் கொள்ளை கும்பலைப் பிடிக்க தொடர்ந்து போராடுவதுதான் இதன் கதைக்களம். க்ரைம், திரில்லர் சீரிஸான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) முதல் வெளியாகிறது.
Wilderness (ஆங்கிலம்) – Amazon Prime Video
மார்னி டிக்கன்ஸ் இயக்கத்தில் ஜென்னா கோல்மேன், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், ஆஷ்லே பென்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Wilderness’. காதல் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) முதல் வெளியாகிறது.
காதல் ஜோடிகளுக்கிடையே நடக்கும் பிரிவு, சந்தேகங்கள், கோபங்கள், மனச் சிக்கல்கள், பயம், தவறான கற்பனைகள் உள்ளிட்ட காதல் திரில்லர்தான் இதன் கதைக்களம்.
The Other Black Girl (ஆங்கிலம்) – Disney+ Hotstar
ஜாக்கியா தலிலா ஹாரிஸ், ரஷிதா ஜோன்ஸ் இயக்கத்தில் சாங்-வூ குவோன், கிம் ஹீ-வோன், டா-பின் பே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Other Black Girl’. இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் இன்று (செப்டம்பர் 15ம் தேதி) முதல் வெளியாகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் கறுப்பினப் பெண்ணின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதைக்களம்.
Han River Police (ஆங்கிலம்) – Disney+ Hotstar
கிம் சாங்-சியோல் இயக்கத்தில் சாங்-வூ குவோன், கிம் ஹீ-வோன், டா-பின் பே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Han River Police’. இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13ம் தேதி முதல் வெளியாகியிருக்கிறது. கடல் ரோந்து காவல் அதிகாரிகளாக இருக்கும் கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், அதுசார்ந்த சம்பவங்கள்தான் இதன் கதைக்களம்.
தியேட்டர் டு ஓடிடி
அநீதி (தமிழ்) Aha
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக இருக்கும் அர்ஜுன்தாஸ்க்கு மற்றவர்களைக் கொலை செய்யும் உந்துதல் உள்ள மனநோய். ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்யும்போது துஷாரா விஜயனுடன் மலரும் காதலால் அந்த மனநோயின் தீவிரம் குறைகிறது. பணக்கார வீட்டுப் பணிப் பெண்ணான துஷாராவுக்கு ஏற்படும் சிக்கல்கள் எப்படி அர்ஜுன்தாஸைக் கொலைகாரராக மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.
Bhola Shankar (Telugu) – Netflix
மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Bhola Shankar’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காவல் துறையினரே சமாளிக்க முடியாத ரவுடி கும்பல்களை அசால்ட்டாக எதிர்கொள்ளும் தாதாவாக இருக்கிறார் சிரஞ்சீவி. இதனால் ஒரு கட்டத்தில் ரவுடி கும்பல்கள் அவருக்கும், அவரை சுற்றியிருப்பவர்களுக்கும் பிரச்னைகள் கொடுக்கின்றன. இந்த ரவுடி கும்பல்களுக்கு சிரஞ்சீவி பதிலடி கொடுத்தாரா, உண்மையில் அவர் யார் என்பதுதான் இதன் கதைக்களம். இது தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்.
Journey of Love 18+ (மலையாளம்) – SonyLIV
பள்ளிபருவத்திலிருந்து காதல் செய்யும் காதல் ஜோடியின் காதலில் என்ன நடந்தது, அவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Digital Village (மலையாளம்) – Amazon Prime Video
ஃபஹத் நந்து, உல்சவ் ராஜீவ் இயக்கத்தில் ரிஷிகேஷ், வைஷ்ணவ், அம்ரித் கே சாந்த், அபினா விஜயன், பிரஜிதா, ஆஷிக் முரளி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Digital Village’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டெக்னாலஜி தெரிந்த மூன்று நண்பர்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும் எல்லோருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைச் சுற்றி நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள்தான் இதன் கதைக்களம்.
Hostel Hudugaru Bekagiddare (கன்னடம்) – Zee5
நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மஞ்சுநாத், பிரஜ்வல் பிபி, அனிருத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hostel Hudugaru Bekagiddare’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் மாணவர்களின் அலப்பறைகள்தான் இதன் கதைக்களம்.
Elemental (ஆங்கிலம்) – Disney+ Hotstar
பீட்டர் சோன் இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் ‘Elemental’. திரையரங்குகளில் வெளியாகிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நீர், நெருப்பு, காற்று, நிலம், என மாயாஜால சக்திகள் கொண்ட நண்பர்கள் எப்படிச் சேர்ந்து ஜாலியாக வாழ்கிறார்கள், அவர்களின் பேன்டஸி உலகம் எப்படிப்பட்டது என்பதுதான் இதன் கதைக்களம்.
இதில் உங்களின் சாய்ஸ் என்ன? படம் பார்த்துவிட்டு கமென்ட் பண்ணுங்க. அடுத்த வாரம் சந்திக்கலாம்.
+ There are no comments
Add yours