ஆனால் தற்போது இத்திரையுலகம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. காரணம் ஹாலிவுட் எழுத்தாளர்கள், சம்பளப் பற்றாக்குறைக்கு எதிராகவும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திரையுலகில் பயன்படுத்துவதற்கு எதிராகவும் கடந்த 11 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் SAG (AFTRA) Screen Actors Guild American Federation of Television and Radio Artists எனும் அமைப்பும் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிறிஸ்டோபர் நோலனின் “ஓப்பன்ஹெய்மர்’ படக்குழுவும் அதன் UK திரையிடல் முடிந்ததும் வெளிநடப்பு செய்துள்ளது.
SAG எனும் இந்த அமைப்பில் உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 1,60,000 பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கதை எழுதுவதைத் தடுக்க வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு திரைத்துறை சார்ந்த நிகழ்விலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர்களின் போராட்டத்தில் தற்போது நடிகர்களும் இணைந்துள்ளதால் திரைப்படம், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றின் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட்டில் எழுத்தாளர்களும், நடிகர் நடிகைகளும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது கடந்த 63 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours