“என்னிடம் பொய் சொல்லி விட்டார் அட்லீ ; பிரியாமணி சொன்ன புது தகவல்
17 செப், 2023 – 10:56 IST
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதன்முதலாக ஷாருக்கானின் படத்தை பான் இந்திய படமாக வெளியிட வேண்டும் என விரும்பியதால் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நன்கு பிரபலமான நட்சத்திரங்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் அட்லீ. குறிப்பாக நடிகை பிரியாமணியை இந்த படத்தில் ஷாருக்கானின் அதிரடிப்படை தலைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்.
இதுகுறித்து தற்போதைய பேட்டி ஒன்றில் பிரியாமணி கூறும்போது, “இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னை அட்லீ அணுகியபோது கதையை கூறியதுடன் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் கூறினார். அப்போது அவரிடம் விஜய் வரும் காட்சியில் நானும் அவருடன் இணைந்து நடிக்கும்படி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று கூறிவிட்டு சென்றார்.
ஆனால் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது தெரிய வந்தது. அந்த விஷயத்தில் அட்லீ என்னை ஏமாற்றி விட்டார் என்பதைவிட விஜய்யுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது என்கிற வருத்தம் தான் அதிகமாக இருந்தது” என்று கூறியுள்ளார். அதேசமயம் அட்லீ தன்னை ஏமாற்றி விட்டார் என்ற வார்த்தையை ஜாலியாகத்தான் கூறினார் பிரியாமணி.
+ There are no comments
Add yours