Last Updated : 17 Sep, 2023 03:58 PM
Published : 17 Sep 2023 03:58 PM
Last Updated : 17 Sep 2023 03:58 PM
கோவை: நடிகர் ரஜினியின் பேரனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா கோவையில் நடைபெற உள்ளதை அடுத்து, விமானம் மூலம் அவர் இன்று கோவை வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஆகும். இதையடுத்து குழந்தைக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா இன்று நடைபெறுகிறது. விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோயிலில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழாவில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பேரனின் காதணி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று ரஜினிகாந்த் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் அவர் சூலூர் புறப்பட்டுச் சென்றார்.
தவறவிடாதீர்!
+ There are no comments
Add yours