Mark Antony Box Office World Wide collection | ‘மார்க் ஆண்டனி’ வசூல் நிலவம்: இத்தனை கோடிகளா கலெக்ஷனா?

Estimated read time 1 min read

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

மார்க் ஆண்டனி:

அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை டைம் ட்ராவல் கதையில் நடிக்க வைத்த படம்தான், மார்க் ஆண்டனி. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல ஒரு பெண் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர். படம், நேற்று (செப்டம்பர் 15) வெளியானது. 

மேலும் படிக்க | அப்போ விவேக்..இப்போ மாரிமுத்து! வரிசையாக உயிரிழக்கும் இந்தியன் 2 பட நடிகர்கள்..!

வசூல்:

தமிழகத்தில் 500 ஸ்கிரீனில் மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. உலகளவிலும் பல திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் இப்படம் 11.55 கோடி ரூபாய் வரை மார்க் ஆண்டனி படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான விஷால் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் மார்க் ஆண்டனி படம் தற்போது 7வது இடத்தை பிடித்துள்ளது. 

இன்றைய வசூல் நிலவரம்:

இந்நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளை விட நேற்று 20 சதவீதம் அதிகம் வசூலித்து உள்ளது. அதன்படி இரண்டாம் நாளில் மட்டும் இப்படம் ரூ.11 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாம். இன்று விடுமுறை தினங்களாக இருப்பதால் மார்க் ஆண்டனி படம் வசூலை மேலும் வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று 13.2 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், மார்க் ஆண்டனி உலகம் முழுவதும் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாசிடிவான விமர்சனம்..

மார்க் ஆண்டனி படத்திற்கு சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் பாசிடிவாக பேசியுள்ளனர். இதுவரை பார்த்திராத புதுவித பாணியில் மார்க் ஆண்டனி படத்தின் கதை பயணிப்பதாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு படத்தில் காமெடி அம்சங்கள் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தரப்பு ரசிகர்கள் படம் சுமாராக இருப்பதாகவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை என்றும் கூறுகின்றனர். 

மார்க் ஆண்டனி கதைக்களம்: 

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்து பேசக்கூடிய கருவியை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி [செல்வராகவன்]. இந்த கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் ஃபோன் மார்க் [ மகன் விஷால்] இடம் கிடைக்க, இதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதன்பின் என்ன நடந்தது? இதில் ஜாக்கி பாண்டியனின் [ எஸ். ஜே. சூர்யா] பங்கு என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.. 

மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல்-டாடா to பதான்..எந்த சேனலில் என்னென்ன புது படங்கள் பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours