லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

விஜய்

த்ரிஷா, அர்ஜுன், சஞ்ஜய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட  பலரும் நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவ்வகையில் ‘லியோ’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

லியோ | Leo

இந்நிலையில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. Keep calm and avoid the battle’ என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்றைய தினம் SIIMA விருது நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் லியோ படத்தின் புரோமோஷன் வேலைகள் விரைவில் தொடங்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. வெளியாகி உள்ள இந்த போஸ்டர் குறித்து உங்களின் கமென்ட்டை பதிவிடுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *