பிறகு தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தது குறித்து பேசிய அவர், என் அம்மாவிற்கு முதலில் தென்னிந்திய சினிமாவில்தான் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் மிகுந்த அன்பைப் பெற்றார். அங்கு நடிப்பது எனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

தென்னிந்திய சினிமாவும் இந்தித் திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. தென்னிந்திய சினிமாவில் இருந்து நாங்கள் நிறைய உத்வேகத்தைப் பெற்றுள்ளோம். மேலும் மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.