பாலிவுட் நடிகை மலைகா அரோராவும், நடிகர் அர்ஜுன் கபூரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். பல பார்ட்டிகளுக்கும் விழாக்களுக்கும் ஜோடியாகவே சென்று வந்தனர். இருவருக்கும் இடையே அதிக வயது வித்தியாசம் இருப்பதாக சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்களும் இவர்களைச் சீண்டும் வகையில் கமென்ட் அடித்து வந்தனர். இந்த நிலையில் சமீப காலமாக இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் சேர்ந்து கலந்து கொள்ளவில்லை.
முன்புபோல விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்களும் இடம்பெறவில்லை. இதனால் அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை மலைகா அரோரா, இன்று காலை அர்ஜுன் கபூர் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதிலிருந்து வெளியேறிவிட்டார்.
அதேசமயம் அர்ஜுன் கபூரை மட்டும் தொடர்ந்து பின் தொடர்கிறார். அதோடு அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலைகா அரோராவின் இப்பதிவு அவர்கள் இரண்டு பேரும் பிரிந்துவிட்டதையே காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அர்ஜுன் கபூர், மலைகா அரோராவின் உறவுக்கு அர்ஜுன் கபூர் குடும்பத்தினர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அர்ஜுன் கபூர் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவரது தந்தை போனி கபூர் புறக்கணித்து வந்தார். இது போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதாகப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது தொடர்பாக இருவரும் அதிகாரபூர்வமாக எதையும் வெளியிடவில்லை.
+ There are no comments
Add yours