சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. நறுகூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணா (40), சுமலதா (36) தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
சென்னையில் இருந்து நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமணா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கணவரின் இறுதிச்சடங்கு நடந்த சில மணி நேரத்தில் சுமலதாவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
+ There are no comments
Add yours