சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ‘கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.

ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறி கருத்துக்களை பதிவிட்டதால் கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: