“குழந்தை திருமண விவகாரம்”: வசமாக சிக்கிய போட்டோ ஆதாரங்கள்-அதிரவைத்த திடுக்கிடும் தகவல்கள்..!

Estimated read time 0 min read

சிதம்பரம்:

தம்பரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பால்ய வயதில் இருக்கும் பலருக்கு குழந்தை திருமணம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார் பல திடிக்கிடும் தகவல்களை குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெரிந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட ஒரு சிலர் சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதே இல்லை என்றும், தீட்சிதர்களின் மீது போடப்பட்டுள்ளது பொய் புகார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற குழந்தை திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வசமாக சிக்கியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் செயலாளராக உள்ள ஒருவர் தனது 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த போலீஸார் ஆதாரங்களின் அடிப்படையில் சில தீட்சிதர்களை கைது செய்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் ஒரு நேர்காணிலில் இந்த விவகாரம் குறித்து பேசியிருந்தார். அப்போது, சிதம்பரம் கோவிலில் அப்படி எந்த குழந்தை திருமணமும் நடைபெறவில்லை என்றும் தீட்சிதர்கள் மீது 8 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணைக்காக அழைத்து சென்ற சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாகவும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் மனஉளைச்சலில் உள்ளதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட தீட்சிதர்களும் போலீஸாரின் மிரட்டலால்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தனர். ஆளுநர் கூறிய கருத்துகளும், இருவிரல் பரிசோதனை விவகாரமும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலில் குழந்தைகளுக்கு திருமணம் நடைப்பெற்றதற்கான ஆதாரங்கள் தற்போது சிக்கியுள்ளது.

ஆதாரங்கள் சிக்கின:

குழந்தை திருமண விவகாரத்தில் தொடர் விசாரணைகள் நடைப்பெற்ற நிலையில், இது குறித்த போட்டோ ஆதாரங்கள் தற்போது சிக்கியுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல அந்த புகைப்படங்களில் பல சிறுவர்களும் சிறுமிகளும் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்களும் சிக்கியுள்ளன. ஒரு சில புகைப்படங்களில் இரண்டு குழந்தைகள் மணமேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் ஒரு புகைப்படத்தில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுமிக்கு தாலி கட்டும் புகைப்படமும் சிக்கியுள்ளது. ஆளுநர், “சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை” என கூறியதையடுத்து, தற்போது சிக்கியுள்ள ஆதாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இருவிரல் பரிசோதனை:

ஆளுநர் தனது நேர்காணில் இருவிரல் பரிசோதனை குறித்த தனது குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் நடராஜர் கோவிலில் விசாரணை மேற்கொண்டு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் மற்றும் இருவிரல் பரிசோனை நடைபெறவில்லை என தெரிவித்தார். மேலும். விசாரணைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஸ்வாப் டெஸ்ட் என்ற வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கையில் பால் சொம்புடன் சிறுமி..

இந்த புகைப்படங்களுக்கு வெளியாவற்கு முன்பு, ஒரு சிறுமி கழத்தில் தாலி காலில் மெட்டி கையில் பால் சொம்புடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதன் அடிப்படையில்தான் போலீஸாரின் விசாரணை இன்னும் கிடுக்குப்பிடி ஆனது. அந்த சிறுமியிடம் நடத்திய வாக்குமூலத்தில், தனக்கு திருமணம் நடைப்பெற்றதை அவர் ஒப்புக்காெண்டாகவும் குழந்தை திருமணம் செய்து கொண்ட பலரின் பெயரை அவர் குறிப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தொடரும் குழந்தை திருமண அவலம்..

பல ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தை திருமணம் தடை செய்யப்பட்ட போதிலும் இந்தியவின் பல்வேறு இடங்களில் இந்த அவலம் தொடர்ந்துதான் வருகிறது. சுமார் 100 வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம், இன்றளவும் சிதம்பரம் கோயிலில் தாெடர்ந்து கொண்டிருப்பது மனக்கஷ்டத்தை உண்டாக்குவதாக சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours