சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு…
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது செலவடை கிராமம். இந்த கிராமத்தில் 7464 எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை அங்கே இருந்து அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் கூறும் போது, இங்கே உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
செலவடை கிராமத்தை சுற்றிலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன.மக்கள் அனைவரும் இந்த மதுபான கடை வழியாகத்தான் சென்றுவர வேண்டும்.இந்த கடையில் குடிக்கும் குடிமகன்கள் அட்டகாசத்தால் பெண்கள் அதுவும் குறிப்பாக பள்ளிக்கு சென்று வரும் மாணவிகள் இந்த வழியில் வருவதற்கு பெரும் அச்சப்பட்டு வருகிறார்கள்.
இந்த மதுபான கடையை இந்த இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.உடனடியாக இந்த மதுபான கடையை இங்கே இருந்து அப்புறப்படுத்தவில்லை என்றால், அனைத்து பொதுமக்களும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.