சேலம்:
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் அருள் எம். எல். ஏ. பேசும் போது. சேலம் மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை மண்டலங்களில் நீரை மறுசுழற்சி செய்யும் முறை நடைபெறுகிறது. அஸ்தம்பட்டி, சூரமங்கலம் மண்டலங்களில் நீரை மறுசு ழற்சி செய்யும் முறையான பாதாள சாக்கடை திட்டப்ப ணியை விரைந்து செய்து தர வேண்டும்? என்றார்.
இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங் கல் துறை அமைச்சர் கே. என். நேரு பதிலளித்து பேசும் போது, ‘சேலம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கு ரூ. 540 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஒப்பந்ததாரர்களிடம் பேசி உள் ளோம். விரைந்து முடித்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார்.
+ There are no comments
Add yours