ஈரோடு:
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் பிடிபட்ட கருப்பன் யானை, பர்கூர் மலைப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த “கருப்பன்” என்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி இன்று காலை பிடிக்கப்பட்டது. முன்னதாக, இந்த யானையைப் பிடிக்க கடந்த ஜனவரி மாதம் முதல் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
பிடிபட்ட காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன், லாரியில் ஏற்றபட்டு பர்கூர் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
தட்டகரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக- கர்நாடக எல்லையான கர்கேகண்டி பள்ளம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கருப்பன் யானை அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது.
முன்னதாக மருத்துவக் குழுவினரால் மயக்கம் தெளிவதற்கான ஊசி செலுத்தப்பட்டு, அதன் பிறகு யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
+ There are no comments
Add yours