சென்னை:

CORONA UPDATE MASK MANDATORY

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு ஏராள மானோர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் இறந்தனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்க ளாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் நேற்று 523 பேர் பெருந் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொது சுகா தாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட புற நோயாளிகள், உள் நோயா ளிகள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாய மாக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தனர். ஒரு சிலர் முக கவசம் அணி யாமலும் வந்ததால் மாநக ராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் நீதிமன்ற வளா கத்தின் முன்பு நின்று அங்கு வருபவர்களை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனர்.

முக கவசம் அணியாமல் வந்தால் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவ தால் மாவட்ட நிர்வாகம் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: