மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ முதல் பார்வை வெளியீடு | Heres the first look of mohanlal starrer Malaikottai Vaaliban

Estimated read time 1 min read

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல்பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படம் இந்த வருட இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் கயிறு ஒன்றை மோகன்லால் இழுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருக்கு பின்புறம் நிலா இருப்பது போலவும் முதல்பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours