நடிகை ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜின் ‘தோனி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
பல்வேறு துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கும் ராதிகா, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படங்களில் விரும்பி நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்து மிசஸ். அண்டர்கவர் திரைப்படம் நேற்று ஓ.டிடி யில் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இந்தப் படம் தொடர்பான புரொமோஷன் இன்டர்வியூவில் பேசிய ராதிகா ஆப்தே, சினிமா துறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர், “சினிமாதுறையில் பலர், நடிகைகளை உருவகேலி செய்து வருகின்றனர். குறிப்பாக, இதை அவர்கள் தங்கள் உரிமையாகக் கருதுகின்றனர். இதே போன்ற உருவகேலி அவமானம் எனக்கும் நடந்துள்ளது.
+ There are no comments
Add yours