Naga Chaitanya Dance With Cops And Announced That Custody First Single Head Up High Will Release Tomorrow

Estimated read time 1 min read

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ஹெட் அப் ஹை” எனும் பாடல் நாளை மாலை 06.31 மணிக்கு வெளியாகிறது.

போலீசாருடன் நடனமாடும் நாக சைதன்யா:

கஸ்டடி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதை முன்னிட்டு, அதற்கான விளம்பரத்தின் ஒருபகுதியாக, யூசப்கூடா பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் உண்மையான காவலர்களுடன் அந்த படக்குழு கலந்துரையாடியது. அப்போது, போலீசாருடன் சேர்ந்து நாக சைதன்யா நடனமாடி அசத்தினார். அதுதொடர்பான வீடியோவில் காவலர்களும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகியுள்ளது.  இதனை நாக சைதன்யாவின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

வெங்கட்-பிரபுவின் கஸ்டடி:

மாநாடு படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து மன்மத லீலை படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தெலுங்கில் முதல்முறையாக இயக்கும் படம் கஸ்டடி. காவல்துறையை சேர்ந்த நாயகனின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இவர்களுடன் கிரீத்தி ஷெரீ, சரத் குமார், பிரியாமணி,  மற்றும் ரவி பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ள ஆக்‌ஷன் நிறைந்த இப்படம், வரும் மே 12ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் இருமொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி தருமா ”கஸ்டடி”

மாநாடு படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோன்று தான், சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா நடிப்பில் அண்மையில் வெளியான லவ் ஸ்டோரி மற்றும் பங்கர்ராஜு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் வெற்றிப்பாதைக்கு திரும்ப, கஸ்டடி படத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை, மே 12ம் தேதி வரையில் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours