Actor Ajith’s Father Passed Away: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித்குமார் தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அஜித்தின் தந்தை சுப்ரமணியம் (85) மரணமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை 4:30 மணிக்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
— Suresh Chandra (@SureshChandraa) March 24, 2023
அஜித் அறிக்கை
இதுதொடர்பாக, நடிகர் அஜித்குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அஜித்குமார், அவரது மூத்த சகோதரர் அனுப் குமார், இளைய சகோதரர் அனில் குமார் ஆகியோரின் பேரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்,”எங்களது தந்தையார் பி.எஸ்.மணி (85) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும். அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
உதயநிதி அஞ்சலி
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் அவர் வீட்டிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் இரங்கல்
நடிகர் அஜித்குமார் தந்தை மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.
தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/8BAuKow65U
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 24, 2023
தொடர்ந்து பிரபலங்கள் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உடல் இன்று காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Stay Strong Thala #Ajithkumar pic.twitter.com/NLmZoBIA1x
— Mr. (@anandAJITHAK) March 24, 2023
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours