“இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி” – மாரடைப்பிலிருந்து மீண்ட சுஷ்மிதா சென் | Sushmita Sen’s Holi celebrations after heart attack

Estimated read time 1 min read

ஜிம்முக்கு சென்றதுதான் எனக்கு மிகவும் பலனளித்தது. மாரடைப்பு ஆண்களுக்கு மட்டுமே வரும் என பெண்கள் நினைத்துவிடக் கூடாது. அது பெண்களையும் பாதிக்கும். பயப்படத் தேவையில்லை ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சுஷ்மிதாவின் மற்றொரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. யோகா உருளை மீது படுத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதனுடன், “என் வாழ்க்கை சக்கரம் இதய மருத்துவர்களால் மீட்கப்பட்டுள்ளது. மீண்டும் உடற்பயிற்சிக்குத் திரும்பியுள்ளேன். இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி. உங்கள் ஹோலி எப்படி இருந்தது? “ என அவர் பதிவிட்டுள்ளார்.

சுஷ்மிதாவின் இந்தப் பதிவு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவரது உத்வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours