3/7/2023 2:37:27 PM
பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனின் தங்கை, நூபுர் சனூன். முறைப்படி மேற்கத்திய இசை கற்று இசை ஆல்பங்களில் நடித்து வந்தார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் பலர் தென்னிந்திய படங்களில் அறிமுகமாகி அங்கு பிரபலமானவர்கள். அந்த வரிசையில நூபுரும் தென்னிந்திய படத்தில் அறிமுகமாகிறார்.
வம்சி இயக்கத்தில் பான் இந்தியா படமாக தயாராகும் இதில் ரவி தேஜா ஜோடியாக நடிக்கிறார். காயத்ரி பரத்வாஜ் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கையை தழுவி தயாராகும் இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
+ There are no comments
Add yours