ஆனால், சர்ப்ரைஸாக அங்கு வந்து எனக்கு புரொபோஸ் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அதுவும் பாரீஸில் ஈபிள் டவர் முன் அது நடந்தது மிகவும் மகிழ்ச்சியானது. ஒரு பெண் ஆசைப்படும் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று அது” என்று கூறினார்.
மேலும், பாலிவுட்டைவிட தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பது பற்றியும், இங்கிருந்து அதிக வாய்ப்புகள் வருவது பற்றியும் பேசிய ஹன்சிகா, “உண்மையில், சினிமாவில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்ட மொழியில் மட்டுமே நடிக்க வேண்டுமென்று நான் திட்டமிட்டதில்லை. ஆனால், தென்னிந்திய சினிமாவிலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதனால் மற்ற மொழிப்படங்களில் நடிப்பது குறித்த யோசனைகள் எனக்கு வருவதில்லை. அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. நான் ஒரு பொழுதுபோக்குக் கலைஞர். என்னைப் பொறுத்தவரை, எனக்கு மொழி ஒரு தடையல்ல, எனக்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் பார்வையாளர்களை மகிழ்விப்பேன்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours