Mayilsamy Death: கண்கலங்கிய உதயநிதி… கண்ணீர் விட்டு அழுத சித்தார்த்…. மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்!

Estimated read time 2 min read

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர பாத்திரங்கள் எனக் கலக்கி அனுபவம் மிக்க நடிகர்களுள் ஒருவராக வலம் வந்த மயில்சாமி இன்று (பிப்.19) அதிகாலை மாரடைப்பால் தன் 57 வயதில் உயிரிழந்தார்.

மயில்சாமியின் இழப்பு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அரசியல் தலைவர்கள்,  திரைத்துறையினர் எனப் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அண்ணன் போன்றவர் – உதயநிதி

அதன்படி முன்னதாக மயில்சாமியின் இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"மயில்சாமியின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி. திரையுலகில் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் பெரிய இழப்பு, நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி மிக மிக நல்லவர், நல்ல மனது கொண்டவர்.

அவருடன் நான் அதிகம் பழகியிருக்கிறேன். எல்லோருடனும் பாசமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகுவார். என்னிடம் 10 நாளைக்கு ஒருமுறை ஃபோனில் பேசிவிடுவார். அப்போதும் தன் குடும்பத்துக்காகவோ, அவருக்காகவோ எதுவும் கேட்க மாட்டார். பொது நலனுக்காகவே பேசுவார். என்னுடைய குடும்பத்தின் மீதும் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் என அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர். அவரை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பொதுவாக என் மனசு தங்கம். நெஞ்சுக்கு நீதி படங்களில் இணைந்து நடித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பு முழுவதும் என் கூடவே இருந்தார். என் அண்ணன் போன்றவர், ரொம்ப பாசமாக இருப்பார். படங்களில் நடிப்பது தவிர்த்து ஃபோனில் அழைத்து அவ்வளவு பேசுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத சித்தார்த்

இதேபோல் முன்னதாக மயில்சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சித்தார்த் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், அவர் எனக்கு அவ்வளவு நல்ல நண்பர். தமிழ் திரையுலகை தன் குடும்பமாகப் பார்ப்பார். அவ்வளவு பெரிய மனது கொண்டவர். மாபெரும் சிவபக்தர். தன் குடும்பம், பசங்க, தன் சாமி, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும்… இது தான் மயில்சாமி. இந்த இழப்பைத் தாங்க அவரது குடும்பத்துக்கு இறைவன் சக்தி கொடுக்கட்டும். அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை கண்ணீருடனும் சிரித்த முகத்துடனும் அவரை அனுப்பி வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”நகைச்சுவை உணர்வுடன் பழகுபவர். என்னிடம் பேசும்போதெல்லாம் சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக  இருப்பார். பாசமிக்கவர், இனிய  பண்பாளர். நான் பழகிய வகையில் இளகிய மனம் கொண்டவர். எம்.ஜி.ஆர் மீதும், ஜெயலலிதா மீதும் பற்றும் பாசமும் கொண்டவர். தன்னை நாடி வருபவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்வார்.

எம்.ஜி.ஆர் பக்தர்

எம்ஜிஆர் எப்படி ஒருவர் பசியால் வாடக்கூடாது என நினைத்தாரோ, அப்படி மயில்சாமி பசியில் இருப்பவர்களுக்கு பாக்கெட்டில் இருப்பதை எடுத்து உதவக்கூடியவர். இப்படிப்பட்டவர் இன்று இல்லை என்பது வேதனையளிக்கிறது. இன்னும் ஒரு 25 ஆண்டு காலம் இருந்திருந்தால் அவரது நடிப்பு இன்னும் வெளிப்பட்டிருக்கும். அதிமுக சார்பில் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ”காலையில் இந்த செய்திய கேட்டவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. எம் ஜிஆரின் விசிறி என சொல்ல முடியாது, எம்ஜிஆரின் பக்தர் அவர். உதவும் குணத்தை எம்ஜிஆரிடம் கற்றுள்ளார்” என்றார்.

மயில்சாமி தமிழ் சினிமாவில் 142க்கும் மேற்பட்டுள்ள படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours