Pichaikaran 2: சமீபத்தில் விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவு செய்த ட்வீட் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ட்வீட் செய்து இருந்தார். இந்த ட்விட் மிகப்பெரிய அளவில் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்வீட் செய்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஷூட்டுக்காக லங்காவி தீவிவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் படகில் செல்வது போன்ற காட்சியை எடுத்த போது எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ANTI BIKILI
— vijayantony (@vijayantony) February 12, 2023
மேலும் படிக்க | விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணையப்போகும் சூப்பர் ஸ்டார்?
அதன் பிறகு அங்கிருந்து சென்னை வந்த அவருக்கு பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் நலமாக இருப்பதாக அவரே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பிச்சைக்காரன் 2 படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்போது விஜய் ஆண்டனியின் சமீபத்திய ட்விட்டர் பதிவி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வட இந்தியர்களுக்கு எதிராக ஆவேசமா பேசி வருகிறார், அதோடு வட இந்தியர்களால் பல குற்ற சம்பவங்களும், தமிழனுக்கான வேலை வாய்ப்புகளும் பறிபோவதாக குரல் எழுப்பி வருகிறார். இந்த சூழலில் விஜய் ஆண்டனி வட இந்தியர்களுக்கு ஆதரவாக பதிவிட்டது சீமான் ஆதரவாளர்களை கடுமையாக ட்ரிகர் செய்துள்ளது.
அவர்கள் விஜய் ஆண்டனியின் அந்த ட்வீட்டின் கீழ் வட இந்தியர்கள் செய்த குற்றங்கள் பற்றி செய்திகளில் வந்த ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுத்து பதிவிட்டு வருகிறார்கள். அதோடு தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக தான் இப்படி ஒரு ட்வீட்டை விஜய் ஆண்டனி பதிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஏடிஎம் கொள்ளை, நகைக்கடை கொள்ளை என அடுத்தடுத்து குற்ற சம்பவங்களில் வட இந்தியர்களின் பெயர்கள் அடிபடும் இந்த நேரத்தில் இந்த ட்வீட் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் விஜய் ஆண்டனிக்கு ஆதரவாகவும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். என்ன தான் இருந்தாலும், விஜய் ஆண்டனி தன் கருத்தை வெளியிட உரிமை உள்ளது எனவும், அவரது கருத்துக்கு எதிராக அவர் மீது இப்படி வன்மத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கர்ப்பமா இல்லையா அதுக்கும் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்! இசையால் மயக்கிய ரிஹானா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours