இப்போது வாட்ச் பற்றி பேசுவதைதான் வாட்ச் செய்கிறார்கள் என்று நடிகர் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வினோ இயக்கத்தில் ஸ்ரீ என்பவர் நடித்து தயாரித்து இருக்கும் படம் ‘ப்ராஜெக்ட் சி’. இப்படத்தில் நகைசுவை நடிகர் சாம்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சாம்ஸ் பேசுகையில், “நகைச்சுவை இல்லாமல், வில்லனாக முதல்முதலாக இப்படம் மூலமாக நடித்துள்ளேன். குணசித்திர நடிகனாக என்னுடைய பயணம் தொடர்வதற்கு இப்படம் உதவும் என்று நம்புகிறேன். காமெடி மட்டுமில்லாமல், அனைத்து வேடங்களிலும் இனி நடிப்பேன்” என்று பேசினார்.
தொடர்ந்து சாம்ஸ் பேசுகையில், “தயாரிப்பாளர் ஸ்ரீக்கு ஒரு வேண்டுகோள். வழக்கமாக படம் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கார் வாங்கி கொடுக்கிறார்கள். அதுபோல் நன்றாக நடித்த நடிகர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி கொடுக்கிறார்கள். நீங்கள், ரோலக்ஸ் வாட்ச் கொடுக்க வேண்டாம். ரஃபேல் வாட்ச் வாங்கி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏன்னா, இப்போ வாட்ச் பற்றி பேசுவதைதான் வாட்ச் செய்கிறார்கள். யார் யார் என்னென்ன வாட்ச் கட்டியிருக்கிறார்கள் என்பது முக்கியமா இருக்கு” என்று கிண்டலாக பேசினார்.
+ There are no comments
Add yours