வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் துணை கோட்டம் பரதராமி போலீஸ் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகள், நாட்குறிப்புகள், வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் போலீசாரிடம் பேசிய வேலூர் மாவட்ட எஸ் பி ராஜேஷ்கண்ணன் எல்லைப்புற பகுதியில் பரதராமி காவல் நிலையம் இருப்பதால் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும், சமூக விரோத செயல்களை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை முழுவதும் தடுக்க வேண்டும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், வழக்குகளை விரைவு படுத்த வேண்டும் திருட்டு மற்றும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு வந்துள்ள 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours