வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளுக்கு 62 பேர் கொண்ட ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையானகருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.

இந்தக் குழுவில் உள்ள ஆயுதப்படை போலீசாருக்கு வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது, கட்டிட இடிபாடுகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவது உட்பட பல பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மாவட்ட தலைமையகத்தில் தங்கி இருப்பார்கள்.

தேவைப்படும் நேரத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours