ராணிப்பேட்டை:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அரக்கோணம் கோட்டாட்சியர் அவர்களின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தின் மெளன நிலையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வாலாஜா வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியே ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.சிவகுமார் தலைமையில் 50 மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் ரா.லட்சுமிநாராயணன், வாலாஜா வட்ட தலைவர் பழனி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் அரக்கோணம் கோட்டாட்சியர், அரக்கோணம் உட்கோட்டம் தண்டலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த பரிதிஇளம்வழுதியை காரணம் இன்றி நெமிலி தாலுகா சிறுவளையம் கிராமத்திற்கு மாறுதல் செய்த அரக்கோணம் கோட்டாட்சியரை கண்டித்தும் இதனை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முடிவில் வாலாஜா கிராம நிர்வாக அலுவலர் பார்த்தீபன் நன்றி கூறினார் மேலும் ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours