ராணிப்பேட்டை:
தொண்டு நிறுவனம் சார்பில் 5000 பணை விதை நடும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அக்டோபர் 09 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் அடுத்த ராணிப்பேட்டைக்கு உட்பட்ட லாலாப்பேட்டை திருகாஞ்சனகிரி மலை அடி வாரத்தில், திருகாஞ்சனகிரி ஆலய நிர்வாகத்துடன் இனணந்து விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி டாக்டர். அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் சுற்றுச்சூழல் நலன் காக்கும் விதமாகவும் 5000 பனை விதைகள் நடும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.மகேஷ்வரன் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார், திருகாஞ்சனகிரி ஆலய நிர்வாகத்தினர் தலைமை தாங்கினர், விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு.சி.கேசவன் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு விதை நடும் விழாவினை சிறப்பித்தனர்.
+ There are no comments
Add yours