திண்டுக்கல்:
முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லை அதிர வைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்தவர் மனோஜ். 26 வயதான மனோஜ் மீது கொலை முயற்சி, திருட்டு,வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திருவிழாவின் போது ஏற்பட்ட அடிதடி தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டியதில் மனோஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் வழக்கம் போல நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி ஊர் சுற்றியிருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள முத்தாலம்மன் கோவில் பின்புறம் அமர்ந்து மனோஜும் அவரது நண்பர் அன்பும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஊர் திருவிழா நடந்த அடிதடியில் ராஜ்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மது அருந்தி கொண்டிருந்த மனோஜ் மற்றும் அன்புவின் கண்ணில் ராஜ்குமார் தென்பட அவரை வம்பிலுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜ்குமாரை கீழே தள்ளி ஒருவர் அவரது கால்களை பிடித்துக் கொள்ள மற்றொருவர் அவர் மீது ஏறி உட்கார்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முக லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இந்நிலையில் தேடப்பட்ட வந்த மனோஜ் மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்கள் இருவர் குடிபோதையில் கூலித் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours