இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்..! கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்..!!

Estimated read time 1 min read

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்த பிறகு, புதிய அரசு அமைக்கப்பட்டது, ஆனால் இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை எந்த விதத்திலும் மேம்படவில்லை . இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் இலங்கையை போல் திவால் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் ட்வீட், பாகிஸ்தானின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை டேக் செய்து, லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருள் இல்லை, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். ஹபீஸ் தனது ட்வீட் மூலம் பாகிஸ்தானின் சாதாரண மனிதனின் நிலை மற்றும் மனநிலையை விவரித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், “லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்லை… ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை… ஒரு சாமானியர் ஏன் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளின் விளைவை எதிர்கொள்ள வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார். ஹபீஸ் தனது ட்வீட்டில், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பையும் டேக் செய்துள்ளார்.

நாடு எப்போது வேண்டுமானாலும் திவாலாகலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. அங்குள்ள கரன்சி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது, மறுபுறம் பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் எந்த நேரத்திலும் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது தெஹ்ரிக் – ஐ – இன்சாஃப் கட்சி ஆதரவாளர்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றார். எனினும், பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  ஆனால், தடுப்புகளை மீறி தலைநகர் நோக்கி பேரணி முன்னேறி சென்றதை அடுத்து போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்த நிலையில்,  பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours